பிரபல நடிகர் சோனு சூட்டை நேரில் சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த ரசிகன் - அசரவைத்த நபர்

fans sonu sood
By Kathick Jun 11, 2021 11:30 AM GMT
Report

தமிழ் திரையுலகில் விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகர் சோனு சூட்.

இது மட்டுமின்றி பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்தாண்டு கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு பல வகையில் உதவிகளை செய்த சோனு சூட், இந்தாண்டும் அதே பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.

இந்நிலையில், சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர், அவரை பார்க்க ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு நடந்தே சென்றுள்ளார். வெங்கடேஷ் என்ற அந்த நபர் சுமார் 700 கிலோ மீட்டர் நடந்து சென்றுள்ளார்.

வெறுங்காலில் நடந்து வந்ததை அறிந்த சோனுசூட், அந்த ரசிகரோடு புகைப்படம் எடுத்து கொண்டதோடு, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் தன்னை சந்திக்க வந்த ரசிகரை, அவரது சொந்த ஊருக்கு செல்லும் ஏற்படையும் செய்து தந்துள்ளது சோனு சூட். இந்த தகவல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் சோனு சூட்டை நேரில் சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து வந்த ரசிகன் - அசரவைத்த நபர் | Actor Sonu Sood Fan Walked 700Km For See Him


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US