நடிகை ஆண்ட்ரியா தேசிய விருது பெறுவார்.. இயக்குனர் மிஸ்கின் பேட்டி

andrea mysskin
By Kathick Jun 23, 2021 09:00 AM GMT
Report

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் மிஷ்கின்.

இவர் இயக்கத்தில் அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் டுவிட்டர் ஸ்பேஸ் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், தான் இயக்கி வரும் ‘பிசாசு 2’ படம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா சிறப்பாக நடித்துள்ளதாகவும், இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் எனவும் இயக்குனர் மிஷ்கின் நம்பிக்கையாக தெரிவித்துள்ளார். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US