அண்ணாத்த வசூலை குறைக்கும் குறிப்பிட்ட நபர்கள், பின்னணியில் யார்?

annaatthe rajinikanth
By Yathrika Dec 02, 2021 04:15 AM GMT
Report

 அண்ணாத்த ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு ரிலிஸான படம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சிவாவின் மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்தில் செண்டிமெண்ட் அதிகம் இருந்ததால் இளைஞர்களை இந்த படம் கவரவில்லை.

அதே நேரத்தில் குடும்ப ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது. முதல் 4 நாட்களிலேயே தமிழகத்தின் வசூல் 70 கோடியை தாண்டியது. அதன் பின் மழையால் இப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது, அதோடு எதிர்ப்பார்த்த வசூல் வரவில்லை என்பது உண்மை தான்.

ஆனால், இப்படம் தமிழகத்தில் எப்படியும் ரூ 90 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்பதே நம்பத்தகுந்த பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஆனால், ஒரு சிலர் ட்ராக்கர்ஸ் என்ற பெயரில் இந்த படத்தின் தமிழக வசூலை மிகவும் குறைத்து காட்டி வருகின்றனர்.

அதுவும் ஒருவர் 79 கோடி தான் தமிழகத்தில் அண்ணாத்த வசூல் செய்தது என்று மெகா சைஸ் வடையை சுட்டார்.

இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர், அதே நேரத்தில் இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு சட்டியை விட பெரிய வடையாக ஒருவர் தமிழகத்தில் அண்ணாத்த ரூ 150 கோடி வசூல் என்றும் கூறி அதிர்ச்சியாக்கினார்.

இப்படி ட்ராக்கர்ஸுகள் தங்களுக்கு பிடித்த நடிகர் என்பதற்காக ஒவ்வொரு வசூலை போட்டு வருகின்றனர். உண்மையான வசூல் சன் பிக்சர்ஸே சொன்னால் தான் உண்டு.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US