பிரபல முன்னணி நடிகரின் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் தானா பீஸ்ட் - First லுக் எழுப்பிய சந்தேகம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் தளபதி 65.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இன்று மாலை இப்படத்தின் First லுக் அதிகாரப்பூர்வமாக வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதன் முதலில் உருவாகவிருந்து நின்று போன திரைப்படம் தான் வேட்டை மன்னன். இப்படத்தில் முன்னணி நடிகர் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் கதை தான் பீஸ்ட் படத்தின் கதையா என்று தற்போது சில சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஆம் வேட்டை மன்னன் திரைப்படத்திற்காக சிம்பு நடத்தி போட்டோஷூட்டும் கிட்டத்தட்ட, பீஸ்ட் படத்தின் First லுக் போலவே தான் இருக்கும் என்ற சந்தேகம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.