தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த ஆக்ஷன் திரைப்படங்கள் ! - ஒரு பார்வை

Suriya Vijay Tamil Cinema
1 வாரம் முன்

ஆக்ஷன் திரைப்படங்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உண்டு, அதுவும் இப்போதெல்லாம் நிறைய ஆக்ஷன் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. ஒரு படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெற அந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளே பெரிய காரணமாக இருக்கும். அப்படி பார்க்கையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட், KGF 2 திரைப்படங்கள் பெரிய வரவேற்பை அப்படத்தில் கட்டப்பட்ட ஆக்ஷன் காட்சிகளே முக்கிய காரணம்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ரசிக்கும் படியான ஆக்ஷன் காட்சிகளை கொண்ட தமிழ் திரைப்படங்கள் குறித்த பட்டியலை தான் பார்க்கவுள்ளோம். 

துப்பாக்கி

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. மும்பையில் பயங்கரவாதங்களை செய்யப்போகும் sleeper cells மற்றும் அதன் தலைவரை எப்படி ஒரு விடுமுறையில் வந்த ராணுவ கேப்டன் அழிக்கிறார் என்பதே இப்படத்தின் சுருக்கமான கதை. துப்பாக்கி திரைப்படம் குறித்து சொல்லி தெரியவேண்டியது இல்லை, விஜய்யின் திரைப்பயணத்தில் சரியான நேரத்தில் வந்த சிறந்த திரைப்படம்.

இப்படத்தை மீண்டும் மீண்டும் சலிக்காமல் பார்க்க காரணமாக இருப்பதே அப்படத்தின் அமைக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகள். படம் வெளியான பின் பெரியளவில் பேசப்பட்டது 12 Men Shoot Out. மேலும் விஜய் படங்களுக்கே உரிய ஆக்ஷன் காட்சிகளை உடைத்து, ஒரு ராணுவ பயற்சி பெற்ற அதிகாரி இவ்வளவு துல்லியமாக சண்டைபோடுவாரோ அப்படி இருந்தன ஆக்ஷன் காட்சிகள்.  

தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த ஆக்ஷன் திரைப்படங்கள் ! - ஒரு பார்வை

கைதி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. அந்த வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக லாபத்தை ஈட்டிய திரைப்படமாக கைதி திரைப்படம் அமைந்தது. பாடல்கள், கதாநாயகி உள்ளிட்ட எந்த ஒரு சாதாரண படங்களுக்கு இருக்கும் விஷயங்கள் ஏதும் இல்லாமல், ஒரே இரவில் நடக்கும் கதையாக வெளியானது கைதி திரைப்படம்.

கைதி திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் என்டேர்டைனர் திரைப்படமாக அமைந்தது, படத்தில் அதிகமாக ஆக்ஷன் காட்சிகள் தான் காட்டப்பட்டிருக்கும். ஆனால் அந்த ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிக்கும் படியாக கதையுடன் நகர்ந்து செல்லும். உதாரணமாக சண்டை காட்சிகளிலேயே நமக்கு எமோஷனை கடத்தியிருப்பார்கள்.  

தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த ஆக்ஷன் திரைப்படங்கள் ! - ஒரு பார்வை

அயன்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அயன். இப்படம் தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த கமெர்சியல் திரைப்படமாக பார்க்கப்படுகிறது. தேவா என்ற கடத்தல்காரனின் சாகச பயணமே இந்த அயன் திரைப்படம். இப்படத்தில் எல்லா சண்டை காட்சிகளும் உண்மைத்தன்மையுடன் தத்ரூபமாக காட்டியிருப்பார்கள். குறிப்பாக Congo-வின் நெரிசலான நகர வீதியில் காட்டப்பட்ட சண்டை காட்சி அப்படத்தின் முக்கிய சிறப்பாகவும், தமிழ் சினிமாவின் well executed சண்டை காட்சியாகவும் சொல்லப்படுகிறது.

  தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த ஆக்ஷன் திரைப்படங்கள் ! - ஒரு பார்வை

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஐ. பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் விக்ரமின் அசாத்திய உழைப்பை மறந்திட முடியாது. பிரமாண்டதிற்கு பெயர்போன இயக்குனர் ஷங்கர் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எப்போதும் ஒரு ரகமாக இருக்கும். அப்படி ஐ படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் விக்ரமின் வெவ்வேறு உடல் அமைப்புடன் காட்டப்பட்டிருக்கும். அதன்படி Body Builders, சீனா, கூனன் கதாபாத்திரம் என இத்தனை வித்தியாசமான சண்டை காட்சிகளுக்கு பின்னால் போடப்பட்டிருக்கும் உழைப்பு பெரியது.

  தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த ஆக்ஷன் திரைப்படங்கள் ! - ஒரு பார்வை

மாஸ்டர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் 2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதே விஜய் vs விஜய் சேதுபதி தான். இரண்டு வெவ்வேறு முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளவதே இப்படத்தின் முக்கிய கதை. பவானியின் one punch, JD-யின் காப்பு, ஜெயில் fight என மாஸ்டர் படத்தின் ஆக்ஷன் காட்சிக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உண்டு.

தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த ஆக்ஷன் திரைப்படங்கள் ! - ஒரு பார்வை

சூர்யாவின் ET படத்தை விட காத்து வாக்குல ரெண்டு காதல் பெரிய வசூல் ! முக்கிய பிரபலம் சொன்ன தகவல்..


 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US