பில்லா படப்பிடிப்பு தளத்தில் தல அஜித் செய்த விஷயம், வீடியோவை கண்டு வியந்த ரசிகர்கள்

Ajith Billa
By Jeeva Jun 20, 2021 11:00 AM GMT
Report

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. 

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித். 

அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் அதற்காக வெளிநாடு செல்ல உள்ளனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளனர். 

இந்நிலையில் இவர் நடிப்பில் இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பில்லா. 

இப்படத்தின் படப்பிடிப்பில் கூட தல அஜித் அங்கிருக்கும் படக்குழுவினரை புகைப்படம் எடுத்து அதை அவர்களிடம் காட்டி ரசித்துள்ளார்.

தல அஜித்தின் இந்த செயலை கண்டு வியந்த ரசிகர்கள் அவரை புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US