Heart beat சீசன் 3.. ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல்..

By Karthick Raja May 24, 2026 03:00 AM GMT
Report

Heart beat

ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த 2024ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய வெப் சீரிஸ் Heart beat. ஒவ்வொரு வாரமும் 4 எபிசோட்கள் என மொத்தம் 100 எபிசோட் கொண்ட வெப் சீரிஸ்தான் இது. இதில் தீபா பாலு, அனுமோல், யோகா லட்சுமி, சாருகேஷ், கார்த்திக் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

Heart beat சீசன் 3.. ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல்.. | Heart Beat Season 3 Web Series Release Date

மருத்துவ துறை பின்னணியில் இந்த கதை நகர்ந்தாலும், அனாதையாக விடப்பட்ட குழந்தை வளர்ந்தபின் தனது தாய்யை தேடி வருவதையும், அதன்பின் அந்த பெண் எதிர்கொள்ளும் சம்பவங்களையும் மையமாக வைத்துதான் Heart beat வெப் சீரிஸ் உருவாகியிருந்தது.

Heart beat சீசன் 3.. ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல்.. | Heart Beat Season 3 Web Series Release Date

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

முதல் சீசன் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு Heart beat சீசன் 2 வெளிவந்தது. முந்தைய சீசனை விட Heart beat சீசன் 2-விற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க பட்டிதொட்டி எங்கும் இந்த வெப் சீரிஸ் வெற்றிபெற்றது. இதனால் Heart beat சீசன் 3 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டது.

சீசன் 3 ரிலீஸ் எப்போது

அதன்படி, சமீபத்தில் Heart beat சீசன் 3-யின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இந்நிலையில், Heart beat சீசன் 3 எப்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.

Heart beat சீசன் 3.. ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல்.. | Heart Beat Season 3 Web Series Release Date

அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது; வருகிற ஜூன் 25ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் Heart beat சீசன் 3 ஒளிபரப்பாக அதிக வாய்ப்புள்ளது என்றும், ஏறக்குறைய இது உறுதியான தகவல் என்றும் கூறப்படுகிறது. விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US