தமிழ் சினிமாவில் இதுவரை இண்டஸ்ட்ரி ஹிட்டான திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ
இண்டஸ்ட்ரி ஹிட்
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அப்படத்தின் வசூலை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது. வெற்றிபெறும் திரைப்படங்களை ஹிட், சூப்பர்ஹிட், ப்ளாக்பஸ்டர் என பல வகைகளில் பிரித்து பார்க்கிறோம்.

இதில் இண்டஸ்ட்ரி ஹிட் என்கிற ஒரு வகையும் உள்ளது. சமீபத்தில் வெளிவந்த 'லோகா சாப்டர் 1 சந்திரா' படம் ரூ. 300+ கோடிக்கும் மேல் வசூல் செய்து, மலையாள திரையுலகின் இண்டஸ்ட்ரி ஹிட்டானது.
அப்படி தமிழ் சினிமாவில் கடைசியாக வெளிவந்த இண்டஸ்ட்ரி ஹிட் படம் என்றால் அது, 2.0 தான். அதன்பின் இந்த சாதனையை ரூ. 1000 கோடி வசூல் செய்து கூலி முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. ஜெயிலர் 2 தமிழ் சினிமாவின் அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிஸ்ட்
இந்த நிலையில், இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான திரைப்படங்கள் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
- மனிதன் (1987) - ரூ. 5.75 கோடி
- அபூர்வ சகோதரர்கள் (1989) = ரூ. 10.1 கோடி
- தளபதி (1991) - ரூ. 12.5 கோடி
- அண்ணாமலை (1992) - 15.6 கோடி
- காதலன் (1994) - ரூ. 17.5 கோடி
- பாட்ஷா (1995) - ரூ. 36.3 கோடி
- இந்தியன் (1996) - ரூ. 58.1 கோடி
- படையப்பா (1999) - ரூ. 60.4 கோடி
- சந்திரமுகி (2005) - ரூ. 89.1 கோடி
- சிவாஜி (2007) - ரூ. 153 கோடி
- எந்திரன் (2010) - ரூ. 300+ கோடி
- கபாலி (2016) - ரூ. 305 கோடி
- 2.0 (2017) - ரூ. 700 கோடி