பிரேமம் பட இயக்குனரின் கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன் - என்ன சொன்னார் தெரியுமா
தசாவதாரம் திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆனாதால், நடிகர் கமல் தனது பேஸ்புக் பக்கத்தில் சில அன்ஸீன் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
அந்தப் பதிவில், பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்" தசாவதாரம் திரையுலகில் ஒரு PHD.
மைக்கல் மதன காமராஜன் திரையுலகில் டிகிரி, என்று குறிப்பிட்டு அப்படத்தை எப்படி எடுத்தீர்கள் " என்று கேள்வி கேட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் அதற்கு, தற்போது பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது : " நன்றி அல்ஃபோன்ஸ் புத்திரன். சீக்கிரம் சொல்கிறேன். உங்களுக்கு எந்த அளவுக்கு கற்றுக்கொள்ள உதவும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் நிறைய கத்துக்கிட்டேன்.
நான் சொன்ன மாதிரி அது ஒரு மாஸ்டர் கிளாஸ். படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் கழித்தும் இதுகுறித்துப் பேசுவது எனக்கு புதிய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது " என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.