நின்றுபோன காவேரியின் திருமணம்.. மகிழ்ச்சியில் விஜய்.. மகாநதி சீரியல் புரோமோ

By Karthick Raja May 24, 2026 05:15 AM GMT
Report

மகாநதி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இதில் காவேரி தனது நினைவுகளை இழந்து புதிய வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், அவள் இறந்துவிட்டதாக என விஜய்யிடம் கூறிவிட்டனர்.

நின்றுபோன காவேரியின் திருமணம்.. மகிழ்ச்சியில் விஜய்.. மகாநதி சீரியல் புரோமோ | Kaveri Marriage Stopped In Mahanadhi Serial

இதனால் மனைவி இறந்த நிலையில், தனது மகளை தனியாக வளர்த்து வந்தார் விஜய். இந்த சமயத்தில் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் காவேரியை விஜய் பார்க்க, தனது மனைவி இறக்கவில்லை என மகிழ்ச்சியடைந்தார். இதனால் மீண்டும் முதலில் இருந்து காவேரியை காதலிக்க தொடங்கினார்.

நின்றுபோன காவேரியின் திருமணம்.. மகிழ்ச்சியில் விஜய்.. மகாநதி சீரியல் புரோமோ | Kaveri Marriage Stopped In Mahanadhi Serial

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

காவேரியும் விஜய்யுடன் மீண்டும் ஒன்று சேரவேண்டும் என குடும்பத்தில் உள்ளவர்கள் நினைத்தாலும், காவேரிக்கு இதில் உடன்பாடு இல்லை. இதனால் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள காவேரி முடிவு செய்தார்.

நின்றுபோன திருமணம்

இந்த நிலையில், அந்த திருமணம் தற்போது நின்றுபோய் விட்டது. மாப்பிள்ளை வீட்டிற்கு காவேரியின் அம்மா சென்று, "தனது மகளுக்கு விபத்து ஏற்பட்ட பின் திடீரென கத்துவாள், மாமியாருக்கு அடங்கி போகிற மருமகளாக இருக்க மாட்டாள்" என சொல்ல, அந்த மாப்பிள்ளை இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்.

நின்றுபோன காவேரியின் திருமணம்.. மகிழ்ச்சியில் விஜய்.. மகாநதி சீரியல் புரோமோ | Kaveri Marriage Stopped In Mahanadhi Serial

இதனால் காவேரி திருமணம் நின்றுவிட்டது. இதை அறிந்து விஜய் செம மகிழ்ச்சியில் உள்ளார். அப்போது கூட, "தன்னை மிகவும் நேசிக்கும் ஒருவரைதான் திருமணம் செய்துகொள்வேன்" என காவேரி கூறுகிறார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US