விஜய் எங்கள் பெருமை, அவரை போல ஒரு மனிதரை பார்க்க முடியாது- புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை
நடிகர் விஜய் தமிழ் சினிமாவால் கொண்டாடப்படும் பெரிய நடிகர். இவர் படங்கள் செய்யாத சாதனைகள் இல்லை.
ரஜினியை அடுத்த இடத்தில் இவரது படங்கள் தான் அதிகம் இடம்பெற்றுள்ளன, அந்த அளவிற்கு பெரிய ரீச் பெற்றுள்ளார் விஜய்.
தேர்தல் அன்று புதிதாக அவர் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது மிகவும் பரபரப்பா பேசப்பட்டது, அவர் சைக்கிளில் வந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வந்தது.
விஜய் விரைவில் தனது 65வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் தனது 65வது படத்திற்காக ரூ. 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும், ரஜினி வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என ஒரு பத்திரிக்கையாளர் டுவிட் செய்துள்ளார்.
அதைப்பார்த்த நடிகை குஷ்பு, விஜய் எங்களது பெருமை. அவரை போன்ற ஒரு நல்ல குணம் உள்ள சிம்பிளான மனிதரை நீங்கள் பார்க்க முடியாது என டுவிட் செய்திருக்கிறார்.
#Vijay hamaari Shaan hai. He is our pride. And you won’t find more humble and simple person like him. https://t.co/4nywhhFMWw
— KhushbuSundar ❤️ (@khushsundar) June 18, 2021