மாநாடு படத்தின் முதல் வார தமிழ்நாடு வசூல் விவரம்! Block Buster ரிப்போர்ட்..
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள திரைப்படம் தான் மாநாடு.
டைம் லூப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
மேலும் இப்படம் வெளியானது முதல் இப்படம் நிகழ்த்தி வரும் வசூல் சாதனைகள் குறித்த விவரங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது மாநாடு படத்தின் முதல் வார தமிழ்நாடு வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படத்தின் முதல் வார தமிழ்நாடு வசூல் - ரூ.40 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் இதுவரை இப்படம் ரூ.3.75 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.