நடிகை மகாலட்சுமி வெளியிட்ட அதிரடி பதிவு.. என்ன கூறியிருக்கிறார் பாருங்க
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்துகொண்டதால் வைரல் ஆனவர். அவர் தமிழ் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார்.
இந்த நிலையில், தயாரிப்பாளார் ரவீந்தர் குறித்து வதந்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், அதுகுறித்து அவரது மனைவி மஹாலக்ஷ்மி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மஹாலக்ஷ்மி பதிவு
இந்நிலையில் நடிகை மஹாலக்ஷ்மி தற்போது இந்த விவாகாரம் பற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
"எங்களுக்கு உண்மை தெரியும், அது தான் மிகவும் முக்கியம். நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம், டிராமா செய்வதை விட அமைதியை விரும்புகிறோம்."
"முழு கதை என்ன என்பதை தெரிந்துகொள்ளாமல் எங்களை பற்றி முடிவு செய்யாதீர்கள். உண்மை விரைவில் வரும். நாங்கள் ஆரோகியமாக, பாசிட்டிவ் ஆக, நிஜமாகவே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்" என மஹாலஷ்மி பதிவிட்டு இருக்கிறார்.