சோலோவாக ரிலீசாகும் மோகன்லாலின் ரூ.100 கோடி பட்ஜெட் திரைப்படம் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
குஞ்சலி மரைக்காயர் என்பவற்றின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார் இதுமட்டுமின்றி நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி ஓணம் பண்டிகைக்கு ‘மரைக்காயர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என தெரிவித்திருந்ததை அறிவோம்.
அதேநேரத்தில் இந்த படம் ரிலீசாகும் சமயத்தில் மற்ற படங்கள் எதுவும் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வாரங்களுக்கு சுமார் 600 திரையரங்குகளில் இப்படத்தை போட்டியின்றி திரையிட முடிவு செய்துள்ளனர்.