Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா
OTT
திரையரங்கில் வெளிவரும் படங்களை ரசிகர்கள் எப்படி மாபெரும் அளவில் கொண்டாடுவார்கள் என்பது உலகம் அறிந்த விஷயம்தான்.
ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பின் திரையரங்கா அல்லது OTT-யா என்கிற சாய்ஸ் மக்கள் மத்தியில் வந்துவிட்டது. ஒரு படம் வெளிவந்து 4 அல்லது 6 வாரங்களுக்குள் OTT தளங்களில் வெளியாகிறது.
மேலும் படங்களின் ரிலீஸ் தேதியை கூட முன்னணி OTT நிறுவனங்கள் தான் முடிவு செய்வதாகவும் கூறுகின்றனர். சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். OTT-ல் முன்னணி தளங்களில் ஒன்றான Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படம்
அதன்படி, இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களிலேயே Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா தானாம். இப்படத்தை இதுவரை Netflix-ல் 27 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலிடத்தை மகாராஜா படம் பிடித்துள்ள நிலையில், இரண்டாவது இடத்தை விஜய்யின் கோட் மற்றும் மூன்றாவது இடத்தை அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் பிடித்துள்ளன.

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
