மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By Yathrika Feb 20, 2026 08:00 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. 

கதையில் இப்போது பெற்ற அம்மாவும் சரி கட்டிய கணவனும் சரி இருவருமே வெளியே போ எங்கேயாவது போ என துரத்தியதால் தற்கொலை செய்யும் முடிவை எடுத்த மயிலை காப்பாற்றி அவரது மனநிலையை மாற்றியுள்ளார் மீனா.

அவர் மயிலுக்கு இவ்வளவு உதவி செய்வது செந்திலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எப்படியோ மீனா செந்திலை சமாதானப்படுத்தி சண்டை இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial Feb 20 Episode

இன்றைய எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்று செந்தில் மீனாவிற்குள் பெரிய பிரச்சனை மீண்டும் வெடித்துள்ளது.

அதாவது மயில் மீனா போனிற்கு, மீண்டும் மீண்டும் உன்னை தொந்தரவு செய்கிறேன் என நினைக்காதே, நான் வேலை கேட்டனே என்ன ஆனது என வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்.

மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial Feb 20 Episode

அதை செந்தில் கேட்டு செம கோபப்படுகிறார், மீனாவிடம் அவருக்கு வேலை எல்லாம் வாங்கி கொடுக்கக்கூடாது என கோபமாக கூறுகிறார். அதையும் மீறி அவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்தால் கண்டிப்பாக நீ அவர்களுக்கு செய்த விஷயத்தை வீட்டில் கூறிவிடுவேன்.

அதுமட்டும் இல்லை, கண்டிப்பாக நான் உன்னிடம் பேச மாட்டேன், பழையபடி சும்மா சொல்லவில்லை நிஜமாக பேச மாட்டேன் என்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US