1200 திரைப்படங்களில் பணியாற்றிய PRO ஜான்சன் அவர்கள் கடந்து வந்த பாதை..

PRO johnson
By Kathick Jul 22, 2021 08:01 AM GMT
Report

திரையில் தோன்றுபவர்களையும், திரைப்படங்களை கண்டுகளிக்கும் மக்களையும் இணைக்கும் பாலமாக இருப்பவர்கள் தான் PRO-கள்.

அத்தகைய பணியைத் திரைத்துறையில் 30 ஆண்டுகளாக செய்துவரும், பிரபல PRO திரு. ஜான்சன் தற்போது 1200 திரைப்படங்களை கடந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

தனது வாழ்க்கை பயணத்தை குறித்து அவர் கூறுகையில் :

 ராம.சுப்பையா இயக்கத்தில் மீனா நாயகியாக அறிமுகமாகிய ஒரு புதிய கதை படம் தான், எனது முதல் படம்.

இதனை தொடர்ந்து ‘புது பொண்டாட்டி’ படம் மூலம் பஞ்சுஅருணாச்சலம் சார் படத்தில் வேலை ஆரம்பித்தேன். அப்போது, 1993. அந்த நேரத்தில தான் எனக்கு H.J.மனோ அவர்களுடன் திருமணம் நடந்தது. அப்போது பஞ்சு சார் என்னை அழைத்து ‘ரஜினி நடிக்கிற 'வீரா படத்தை கொடுத்தார்.

இதை அடுத்து, “அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா... ‘நந்தவனத்தேரு’ என்கிற படம் மூலம் அவரது படங்களுக்கு வேலை கிடைத்தது. அவர்தான், நவரச நாயகன் ‘கார்த்திக் முத்துராமன்’ அவர்களிடம் பெர்சனல் PRO-வாக சேர்த்துவிட்டார். அவர் மூலம் சுந்தர்.சி-யின் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் கிடைத்தது. 

டைரக்டர் செல்வாவின் ‘சிஷ்யா’ படம் மூலம் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். கவிதாலயாவின் ‘ஆல்பம்’, ‘சாமி’, ‘திருமலை’ மேலும் தொடர்சியாக.., எஸ்.பி.சரணின் கேபிட்டல் பிலிம் ஒர்க்ஸ் ‘உன்னை சரணடந்தால்’, ‘சென்னை-28’ படங்களைத் தொடர்ந்து அனைத்து படங்களில் பணியாற்றியுள்ளார்.

சத்தியஜோதி பிலிம்ஸ், ஆஸ்கர் மூவீஸ், சூப்பர் குட் பிலிம்ஸ், ஜி.கே. பிலிம்ஸ், கிளவுட்9, பி வி பி சினிமா, ராக்லைன், ஜி ஜே சினிமா, ஜெமினி லேப், முரளி சினி ஆர்ட்ஸ், பிரகாஷ்ராஜ் டூயட் மூவீஸ், AGS, நல்லுசாமி பிக்சர்ஸ், பிரமிட் பிலிம்ஸ், சௌந்தர்யா ரஜினிகாந்த் இன் ஆக்கர் ஸ்டுடியோஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ஸ்டுடியோ கிரீன், எஸ்கேப் ஆர்டிஸ்ட், பொட்டன்சியல் ஸ்டுடியோஸ், பிரின்ஸ் பிக்சர்ஸ், 2D, டிரீம் வாரியர் பிக்சர்ஸ், மாதவ் மீடியா, டிரம் ஸ்டிக் இப்படி பல பெரிய நிறுவனங்களில் ஜான்சன் பணிபுரிகிறார். 

ஜான்சனுக்கு, ‘கனிமொழி’ 1000-மாவது படம். நடிகை சோனா, டி.சிவா இணைந்து தயாரிக்க, ஸ்ரீபதி இயக்கத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடித்திருந்தார். இப்பட விழாவிற்கு அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் வந்திருந்தார். அந்த நிகழ்வில் ஜான்சனுக்கு, கலைஞரே பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

இதே நேரத்தில் ஆர்டிஸ்ட் மேனேஜிங் செய்வதற்கான வாய்ப்புகளும் அமைந்ததை அடுத்து ஜான்சன் இந்த பரிமாணத்திலும் இயங்கியுள்ளார். கனிமொழியை அடுத்து தற்போது மொத்தமாக 1200 படங்களுக்கு மேல் ஜான்சன் வெற்றிகரமாக பணியாற்றியுள்ளார்.

PRO வாக பணியாற்றிய ஜான்சன், நடிகர் வினய், அஞ்சலி, ஸ்ரியா ரெட்டி, மீரா நந்தன், ரம்யா நம்பீசன், நயன்தாரா உள்ளிட்டோரை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான்சனுக்கு H.J.மனோ என்கிற மனைவியும், மகள் H.M.அஹில்மா, மகன் H.M.மஹில் என அழகான குடும்பம் உள்ளது. 1200 திரைப்படங்களில் PRO வாக பணியாற்றியுள்ள ஜான்சன் அவர்களின் தொடர் வெற்றி பயணத்திற்கு, சினிஉலகத்தின் வாழ்த்துக்கள்...  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US