முன்னணி நடிகரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி - வெளியான செம மாஸ் தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் கைகோர்க்க இருக்கிறார் என தகவல் வெளியானது.
அதுமட்மின்றி ரஜினியை வைத்து பேட்ட எனும் சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலும் ரஜினி நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் கார்த்திக் சுப்ராஜ் என இருவருடனும் தனது அடுத்த படத்தை ரஜினி இன்னும் முடிவுசெய்யவில்லை என தெரிவிக்கின்றனர்.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னணி நடிகரும் தனது மருமகனுமான தனுஷின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் இதற்கு முன்பே ராஜ்கிரணை வைத்து பா.பாண்டி எனும் அருமையான படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.