10-வது சர்வதேச அனிமே விருது விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவிற்கு கிடைத்த கௌரவம்

By Karthick Raja May 24, 2026 04:30 AM GMT
Report

அனிமே விருதுகள்

சோனி நிறுவனத்தின் அனிமே (Anime) ஸ்ட்ரீமிங் தளமான கிரன்சிரோல் ஆண்டுதோறும் அனிமே விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 10-வது சர்வதேச அனிமே விருதுகள் 2026 விழா நேற்று (மே 23ஆம் தேதி) டோக்கியோவில் கோலாகலமாக நடைபெற்றது.

10-வது சர்வதேச அனிமே விருது விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவிற்கு கிடைத்த கௌரவம் | Rashmika Mandanna In 10Th Anime Awards

தொகுப்பாளினி மணிமேகலை வீட்டில் விசேஷம்... போட்டோவுடன் இதோ, வாழ்த்தும் ரசிகர்கள்

தொகுப்பாளினி மணிமேகலை வீட்டில் விசேஷம்... போட்டோவுடன் இதோ, வாழ்த்தும் ரசிகர்கள்

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இந்த விழாவில் இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை ராஷ்மிகா மந்தனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கௌரவம்

மேடையில் 'பிளாக் பாந்தர்' பட நடிகர் வின்ஸ்டன் டியூக் உடன் இணைந்து இந்த ஆண்டின் 'சிறந்த அனிமேஷன்' விருதை அவர் வழங்கினார். சிறந்த அனிமே விருதை 'சோலோ லெவலிங் சீசன் 2: அரைஸ் பிரம் தி ஷேடோ வென்றது.

10-வது சர்வதேச அனிமே விருது விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவிற்கு கிடைத்த கௌரவம் | Rashmika Mandanna In 10Th Anime Awards

சர்வேதேச அளவில் நடைபெறும் அனிமே விருதுகள் மேடையில் இந்திய நடிகையாக ராஷ்மிகா மந்தனா பங்கேற்று விருது வழங்கியது, இந்திய சினிமாவுக்கு கிடைத்த ஒரு மாபெரும் அங்கீகாரமாகவும், கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US