சர்ச்சை பட இயக்குனருடன் கூட்டணி அமைகிறாரா நடிகர் சந்தானம்?

santhanam rathna kumar aadai
By Kathick Jun 21, 2021 06:50 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், சில வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

இவர் தற்போது டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், சபாபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சந்தானம், அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்ன குமார் இயக்கத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ரத்ன குமார், சமீபத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தார்.

ரத்ன குமார் இயக்கிய ஆடை பல சர்ச்சைகளில் சிக்கி, அதன்பின் வெளியானது குறிப்பிடத்தக்கது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US