கழுத்தில் தாலியுடன். திருமண கோலத்தில் பிக் பாஸ் சாக்ஷி- காரணம் இதுதானா
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது நடிகை சாக்ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில், கழுத்தில் தாலியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் இது விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இதை கவனிக்காத சில ரசிகர்கள், அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கருதி பேசி வருகின்றனர்.