இயக்குநர் ஷங்கரின் அடுத்த திரைப்படத்திற்கு நடிகர் அஜித் பட டைட்டிலா! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..
ஷங்கர் படத்திற்கு அஜித் தலைப்பு2
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் ஷங்கர், தமிழில் ஏகப்பட்ட பிரம்மாண்ட பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்துள்ள ஷங்கர் தற்போது தெலுங்கு பக்கம் சென்றுள்ளார்.
அங்கு ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் RC15 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் போஸ்ட் உரிமம் மட்டும் சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த ஆச்சர்யமளிக்கும் தகவல் தான் இணையத்தில் பரவி வருகிறது. ஆம் இப்படத்தின் டைட்டில் சிட்டிசன் என வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இந்த தகவல் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, ஏற்கனவே தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் சிட்டிசன் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனிடையே தமிழில் மீண்டும் இதே தலைப்பில் திரைப்படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
2001ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ