மனோஜுக்கு விபத்து.. பதறிய விஜயா! சிறகடிக்க ஆசை புது ப்ரோமோ
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ரோகிணி தான் கிரிஷ்ஷின் அம்மா என்பது எப்போது எல்லோருக்கும் தெரியவரும் என்பது தான் எல்லோரது கேள்வியாக தற்போது இருந்து வருகிறது.
மறுபுறம் மனோஜ் தன்னிடம் பணத்தை ஏமாற்றிய நபரை தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோவில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது.
மனோஜ் விபத்து
தன்னை ஏமாற்றியவரை பார்த்ததும் பிடிக்க ஓடுகிறார் மனோஜ். ஆனால் அப்போது அவர் ஒரு வண்டியில் மோதி கண்ணில் அடிபட்டுவிடுகிறது.
அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்து ரோகிணி தான் வீட்டிற்கு தகவல் சொல்கிறார். அதை கேட்டு விஜயா கடும் அதிர்ச்சி ஆகிறார். தன்னால் இனி பார்க்க முடியாது என மனோஜ் சோகமாக பேச, அவருக்கு ரோகிணி ஆறுதல் கூறி இருக்கிறார். ப்ரோமோ வீடியோ இதோ.

2025 -ல் நடக்கவிருக்கும் 5 பேரழிவுகள்.., Time Traveler எனக்கூறும் நபர் திகதியை குறிப்பிட்டு கணிப்பு News Lankasri
