சன் டிவியில் டாப் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் நிஜ வயது விவரம் தெரியுமா?... இதோ
சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் பல வருடங்களாக முன்னணி தொலைக்காட்சியாக கிங்காக இருக்கிறது சன் டிவி.
அந்த காலத்தில் எல்லாம் புதுப்படங்கள் என்றால் சன் டிவியில் தான் முதலில் ஒளிபரப்பாகும், அவ்வளவு ஆர்வமாக மக்கள் பார்ப்பார்கள். சன் டிவி புதுப்படங்களை ஒளிபரப்புவதை தாண்டி விதவிதமான சீரியல்கள் ஒளிபரப்பி கெத்து காட்டினார்கள்.
இப்போது கூட இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள் போன்ற சீரியல்கள் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகின்றன.

நடிகைகள் வயது
தற்போது நாம் இந்த பதிவில் சன் டிவி சீரியல் நடிகைகளில் வயது விவரத்தை காணப்போகிறோம்.
சிங்கப்பெண்ணே, ஆனந்தி-அன்பு கட்டிய தாலியை துலைத்துவிட்டு மன கஷ்டத்தில் உள்ளார். அந்த விஷயத்தை வைத்து மகேஷ் ஒரு பிளான் போட்டு தாலியை அன்புவால் மீண்டும் கட்ட வைக்க உள்ளார். சீரியலில் நாயகியாக நடிக்கும் மனிஷாவின் வயது 25 இருக்குமாம்.

மூன்று முடிச்சு சீரியலில் இப்போது சூர்யா-நந்தினி மனதால் இணைந்துள்ள காதல் காட்சிகள் தான் ஹைலைட்டாக ஒளிபரப்பாகிறது. நந்தினியாக நடிக்கும் சுவாதியின் வயது 33 என கூறப்படுகிறது.

கயல் சீரியலில் கயல் தனது தம்பி பேசிய பேச்சால் மன கஷ்டத்தில் உள்ளார். குடும்பத்தில் எழுந்துள்ள இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். கயலாக நடிக்கும் சைத்ராவின் வயது 30 என்கின்றனர்.

மருமகள், ரவுடிகளிடம் சிக்கிய தனது கணவரை எப்படியோ ஆதிரை காப்பாற்றிவிட்டார், அவரை கண்டுபிடிக்க சில ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளார் கேப்ரியல்லா. இவரது வயது 25 தானாம்.
