2022- ல் வெளியாகி அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் - ஒரு பார்வை

By Jeeva May 29, 2022 03:00 PM GMT
Report

தமிழ் திரைப்படங்களுக்கு இப்பொது பெரியளவில் மார்க்கெட் விரிவடைந்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். வருடம் தோறும் வெளியாகும் திரைப்படங்கள் தமிழகம் மட்டுமின்றி உலகளவில் வசூலை வாரி குவித்து வருகிறது. மேலும் இந்த 2022 ஆம் ஆண்டில் டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அப்படி இந்தாண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை குவித்த திரைப்படங்கள் குறித்த பட்டியலை தான் தற்போது பார்க்கவுள்ளோம்.   

பீஸ்ட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். விஜய்யின் ஆக்ஷன் அவதாரத்தில் நெல்சனின் மாறுபட்ட கதைக்களத்தில் உருவான பீஸ்ட் படத்தை அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்தனர். அப்படியான பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்த பீஸ்ட் திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனால் படத்திற்கு தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் பெரிய காலெக்ஷன் கிடைக்கவில்லை. மோசமான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.  

2022- ல் வெளியாகி அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் - ஒரு பார்வை | Tamil Movie Box Office Collections 2022

வலிமை

அஜித்குமார் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வைக்கு பிறகு வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் தொடக்கத்தில் இருந்து அப்டேட்ஸ் கேட்கப்பட்டு பெரியளவில் ட்ரெண்டானது. அப்போதில் இருந்தே படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போனது. அப்படியான பெரிய எதிர்பார்ப்புகளுடன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது வலிமை. பக்கா ஆக்ஷன் திரைப்படமான வலிமை அஜித் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

மேலும் இப்படத்தின் தயாரிப்பாளரே படத்தின் காலெக்ஷன் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த இருந்தார். அதன்படி இப்படம் மொத்தமாக உலகலைவில் ரூ.234 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.  

2022- ல் வெளியாகி அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் - ஒரு பார்வை | Tamil Movie Box Office Collections 2022

எதற்கும் துணிந்தவன்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வந்தது எதற்கும் துணிந்தவன். பிளாக் பஸ்டர் பேமிலி என்டேர்டைனர் படங்களை கொடுத்த வந்த பாண்டிராஜ் உடன் சூர்யா இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்திருந்தார். அதன்படி இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் உலகளவில் மொத்தமாக ரூ.179 கோடிக்கும் வசூல் செய்ததாக சொல்லபடுகிறது.

  2022- ல் வெளியாகி அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் - ஒரு பார்வை | Tamil Movie Box Office Collections 2022

டான்

வரிசையாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வந்ததை தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை அனைவரிடமும் பெற்றது. சிவகார்த்திகேயன் படங்களுக்கே உரிய பாணியில் வெளியான டான் திரைப்படத்தை மக்கள் கொண்டாடினர். அதன்படி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த டான் திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ.120 கோடி வசூல் செய்தது.

  2022- ல் வெளியாகி அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் - ஒரு பார்வை | Tamil Movie Box Office Collections 2022

காத்து வாக்குல ரெண்டு காதல்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட மூன்று டாப் நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். புதிய கதைக்களத்துடன் ரொமான்டிக் காமெடி திரைப்படமாக வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிகமாக நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் மொத்தமாக உலகளவில் ரூ.66 கோடி வசூல் செய்திருக்கிறது.

  2022- ல் வெளியாகி அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் - ஒரு பார்வை | Tamil Movie Box Office Collections 2022

தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US