தளபதி 65 படத்திற்கு பரிசீலனை செய்யப்பட்ட நான்கு டைட்டில்கள், தளபதி விஜய் எதற்கு ஓகே சொன்னார் தெரியுமா?

Vijay Thalapathy 65
By Jeeva Jun 21, 2021 10:50 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் தளபதி விஜய், இவருக்கு இந்தியளவில் பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம். 

மேலும் நடிகர் விஜய் தனது 47 வது பிறந்தநாளை வரும் 22 ஆம் தேதி கொண்டாடவுள்ளார். இதற்காக ரசிகர்கள் CDP எல்லாம் ரிலீஸ் செய்து இணையத்தில் கொண்டாடினர். 

அதுமட்டுமின்றி இன்று மாலை 6 மணிக்கு தளபதி 65 படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது. இதற்காக அனைவரும் இணையத்தில் காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்திற்காக விஜய்யிடம் ஏகப்பட்ட டைட்டில்களை சொன்னதில், நான்கைந்து டைட்டில் இறுதிகட்ட பரிசீலனையில் இருந்ததாம்.

'டார்கெட்', 'ரைஃபிள்', 'புல்லட்', 'ஜூட்' உள்ளிட்ட துப்பாக்கி சம்மந்தபட்ட பெயர்களை வைத்துள்ளனர். இதில் 'டார்கெட்' என்ற டைட்டிலை தான் அவர்கள் தேர்ந்தெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால், அந்த டைட்டில்தான் இறுதிசெய்யப்பட்டதா அல்லது வேறு டைட்டிலை விஜய் ஓகே செய்தாரா என்பது மாலை தெரிந்துவிடும்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US