தளபதி 65 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து வெளியான புதிய தகவல்! ஷூட்டிங் எப்போது தெரியுமா?

Vijay Thalapathy 65
By Jeeva Jun 14, 2021 03:00 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் தளபதி 65.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடக்கவிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் வடபழனி குமரன் காலனியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ஒரு செட் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே விஜய் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கலாம் என சொல்லியிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நடந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பை தொடங்க எண்ணியுள்ளார்களாம்.

மேலும் படப்பிடிப்பு தொடங்கும் அன்று வடபழனி செட்டிலே இரண்டு வாரங்கள் சின்ன டீமுடன் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம். அங்கே பாடல் காட்சியை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் பூஜா ஹெக்டே உடன் விஜய் நடனமாட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US