தளபதி 67 ப்ரோமோ இப்படித்தான் இருக்க போகுதா! விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்

By Dhiviyarajan Jan 29, 2023 08:00 AM GMT
Report

தளபதி 67

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம் தற்போது வரை திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதையடுத்து விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பது நாம் அறிந்ததே. இப்படத்தில் மிஸ்கின், மன்சூர் அலி கான், கவுதம் வாசுதேவ் மேனன் போன்ற நட்சத்திரங்கள் நடிக்க போகிறார்கள் என்று அவர்களே பேட்டியில் கூறினார்கள்.

மேலும் இப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்கயிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தளபதி 67 ப்ரோமோ இப்படித்தான் இருக்க போகுதா! விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான் | Thalapathy 67 Promo Shoot Update

ப்ரோமோ ஷூட் அப்டேட்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் , தளபதி 67 குறித்து ஹிண்ட் கொடுத்தார். அதாவது வரும் பிப்ரவரி 1, 2, 3 தினங்களில் படத்தின் அப்டேட் இருப்பது போல் கூறினார்.

தளபதி 67 படத்தின் ப்ரோமோ ஷூட் பிப்ரவரி 3 -ம் தேதி வெளியாகவுள்ளதாக பல செய்திகள் வெளிவந்த நிலையில் தளபதி 67 படத்தில் ப்ரோமோ ஷூட் குறித்து அப்டேட் ஒன்று வந்துள்ளது.

அது என்னவென்றால் 50 ரௌடிகளை அடிப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடைசி காட்சியில் விஜய் பஞ்ச் டயலாக் உடன் முடிப்பார் என்று கூறப்படுகிறது. 

தளபதி 67 ப்ரோமோ இப்படித்தான் இருக்க போகுதா! விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான் | Thalapathy 67 Promo Shoot Update

பல கோடிகள் லாபத்தை அள்ளி கொடுத்த துணிவு.. செம மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US