நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா?
நா.முத்துக்குமார்
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு பாடலாசிரியராக மாறியவர் தான் நா. முத்துக்குமார்.
சீமான் இயக்கிய வீரநடை திரைப்படத்தில் முதன்முறையாக பாடலை எழுதினார், ஆரம்பமே அவருக்கு வெற்றியாக அமைந்தது.
பின் செல்வராகவன்-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வந்த காதல் கொண்டேன் படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்க அந்த படத்தில் தேவதையை கண்டேன், தொட்டு தொட்டு போகும் தென்றல், உன்னை தோழி என்பதா, நெஞ்சோடு கலந்திடு உறவாலே ஆகிய பாடல்கள் மூலம் கவனம் பெற்றார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தனது பாடல் வரிகளின் எளிமையை போலவே எந்த ஒரு தலைக்கனமும் இல்லாமல் இருந்தார்.
புதிய வீடு
கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருக்கு ஜீவலட்சுமி என்ற மனைவி, ஆதவன் எனும் மகன், மகாலட்சுமி எனும் மகள் இருக்கிறார்.
முத்துக்குமார் உயிரிழந்து 9 வருடங்கள் ஆகப்போகும் நிலையில் அவரது 50வது பிறந்தநாள் கடந்த ஜுலை 12ம் தேதி வந்தது. அவரையும், அவரது குடும்பத்தையும் கௌரவிக்கும் விதமாகவும் ஆனந்த யாழை என்ற இசை கச்சேரி சென்னையில் நடைபெற்றது.
நா.முத்துக்குமாருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியில் அவரின் குடும்பத்தினருக்கு ஃப்ளாட் ஒன்று வழங்கப்பட்டது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஃப்ளாட் விலை ரூ. 80 லட்சம் என கூறப்படுகிறது.
இதுதவிர்த்து நடிகர் சிவக்குமாரும் ரூ. 10 லட்சம் காசோலையை அந்த நிகழ்ச்சியில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.