பாக்கிஸ்தான் ரசிகரை கவர்ந்த விஜய்யின் மாஸ்டர் பட பாடல்! லைக்ஸ்களை அள்ளும் பதிவு

Master Anirudh
By Jeeva Jun 24, 2021 04:30 PM GMT
Report

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படம் இந்தியளவில் மிகவும் பிரபலமாகியுள்ளது. மேலும் ஹிந்தியிலும் இப்படத்தை சல்மான் கான் ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற முக்கிய காரணமாக அமைந்ததே அப்படத்தில் அமைந்துள்ள வாத்தி கமிங் பாடல் தான்.

மேலும் யூடியூப்பில் 200 மில்லியன்களை கடந்துள்ள இப்பாடல் உலகளவில் பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர் ஒருவர் இப்பாடல் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் "அனிருத் நீங்கள் தென் இசைத்துறையின் மந்திரவாதி. 

நான் பாக்கிஸ்தானை சேர்ந்தவன், என்னால் தென்னிந்திய மொழிகளை புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனாலும் இப்போதுதெல்லாம் நான் வாத்தி கமிங் பாடலை தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன். வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US