தளபதி விஜய்காக ஒன்றாக இணையும் கோலிவுட் நட்சத்திரங்கள், பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர்கள் செய்யுவுள்ள விஷயம்

Vijay
By Jeeva Jun 19, 2021 03:15 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் தளபதி விஜய், இவருக்கு இந்தியளவில் பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம். 

மேலும் நடிகர் விஜய் தனது 47 வது பிறந்தநாளை வரும் 22 ஆம் தேதி கொண்டாடவுள்ளார். இதற்காக ரசிகர்கள் CDP எல்லாம் ரிலீஸ் செய்து இணையத்தில் கொண்டாடினர். 

அதுமட்டுமின்றி அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 65 படத்தின் First லுக்கும் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ட்விட்டர் Space கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், வரும் 21 ஆம் தேதி இரவு 9 மணிக்கு தொடங்க உள்ள இந்த ட்விட்டர் Space-ல் இவர்கள் அனைவரும் தளபதி விஜய் குறித்து பேசவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US