யூடியூப்பில் அசத்தல் சாதனை படைத்த தளபதி விஜய்! மொத்தம் இத்தனை 100 மில்லியன் வீடியோக்களா?
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் யூடியூப்பில் எப்போதும் தளபதி விஜய் குறித்த எந்த வீடியோ வெளியானாலும் ட்ரெண்டாகி அதிக பார்வைகளை பெற்று விடும்.
அந்த வகையில் மொத்தமாக 12 தளபதி விஜய் குறித்த வீடியோக்கள் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இது வேறு எந்த தமிழ் நடிகரும் யூடியூப்பில் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.