ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம்.. ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை..
பாக்ஸ் ஆபிஸ்
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் வருகிறது என்பதில்தான் உள்ளது. அதுவும் ரூ. 1000 கோடி என்கிற இலக்கை எட்டவேண்டும் என ஒவ்வொரு பெரிய திரைப்படங்களை எடுக்கும்போதே முடிவு செய்து விடுகின்றனர்.

பெரிய திரைப்படங்களுக்கு இப்படியொரு நிலை இருக்கும் நேரத்தில், சிறிய திரைப்படங்கள் எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலில் மாபெரும் சாதனைகளை படைக்கிறது. உதாரணத்திற்கு தமிழில் வெளிவந்த லவ் டுடே, வாழை, டூரிஸ்ட் பேமிலி போன்ற திரைப்படங்களை கூறலாம்.
ரூ. 10 கோடி பட்ஜெட், ரூ. 1400 கோடி வசூல்
இந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த ஒரு திரைப்படம் ரூ. 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகளவில் ரூ. 1400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அது என்ன படம் என்று உங்களுக்கு தெரியுமா?

இயக்குநர் Curry Barker இயக்கத்தில் ஹாரர் கதைக்களத்தில் உருவாகி ஹாலிவுட்டில் வெளிவந்த திரைப்படம்தான் Obsession. இப்படம் ரூ. 10 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரிலீஸாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த Obsession திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 1400 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருக்கிறது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri