இந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா? 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இயக்குநர்

Kathick
in பிரபலங்கள்Report this article
இயக்குநரின் புகைப்படம்
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் சினிமா இயக்குநரின் சிறு வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. குறும் படம் இயக்கி, அதன்மூலம் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் இவர்.
பின் லோ பட்ஜெட் படத்தின் மூலம் அறிமுகமான இந்த இயக்குநர், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ரூ. 200 கோடிக்கும் மேல் பட்ஜெட் படங்களை இயக்க துவங்கினார். மேலும் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.
இவர் தான்
இரண்டு படங்களின் வசூலையும் சேர்ந்தால் ரூ. 1000 கோடிக்கும் மேல் இருக்கும். அது வேறு எந்த படங்களும் இல்லை கமலின் விக்ரம் மற்றும் தளபதி விஜய்யின் லியோ தான். இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவனும் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் தோல்வியே காணாத இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான்.
ஆம், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இதுவரை வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சிறு வயது புகைப்படம் தான் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் முதல் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து லோகேஷ் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
