120 பேருக்கு Food Poison.. முன்னணி நடிகரின் படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Dhurandhar படம்
பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரன்வீர் சிங். இவர் பஜ்ராவ் மஸ்தானி, பத்மாவத், சிம்பா, 83 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் எனும் அந்தஸ்தை பெற்றார்.
ரன்வீர் சிங் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் Dhurandhar. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக 20 வயது நடிகை சாரா அர்ஜுன் நடித்து வருகிறார். இயக்குநர் ஆதித்யா தார் இப்படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில்தான் இப்படத்திலிருந்து டீசர் ஒன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
120 பேருக்கு Food Poison
Dhurandhar திரைப்படத்தின் தற்போதைய படப்பிடிப்பு காஷ்மீரில் உள்ள லேஹ் பகுதியில் நடைபெற்று வந்தது. இதில் மொத்தம் 600 படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி மதிய உணவு சாப்பிட்ட 120 பேர் வாந்தி, பயக்கம், வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவருக்கு Food Poison ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.
மருத்துவ சிகிச்சைக்கு பின் பாதிக்கப்பட்ட பலருக்கும் உடல் நிலை நன்றாக உள்ளது என்றும், உணவு சாம்பிள் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
