13 வருடம் முன்பு ரிலிஸ் ஆன போது படுதோல்வி, இப்போது Cult பில்லா 2 வசூல் என்ன தெரியுமா?
பில்லா 2
கடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் பில்லா.
இப்பட வெற்றியை தொடர்ந்து உன்னைப் போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் பில்லா 2 படம் வெளியானது. பில்லா 2 படம் எதிர்ப்பார்த்த அளவு போகவில்லை என்றாலும் பலருக்கும் இந்த படம் பிடித்திருந்தது.
படத்தில் இடம்பெற்ற, எனக்கு நண்பனா இருக்க தகுதி வேணாம், எதிரியா இருக்க தகுதி வேணும்; என் வாழ்நாள்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா.. இப்படி பல வசனங்கள் மக்களிடம் பிரபலமானது.
பாக்ஸ் ஆபிஸ்
பில்லா படத்தை போலவே பில்லா 2 படத்தை எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு அவ்வளவாக சந்தோஷம் கிடைக்கவில்லை என்ற கூறினாலும் வசூலில் எந்த குறையும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
தற்போது படம் வெளியாகி 14 வருடங்கள் ஆன நிலையில் இப்பட பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. பல கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் மொத்தமாக அப்போது ரூ. 60 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.