13 வருடத்தை எட்டிய அட்லீயின் ராஜா ராணி திரைப்படம்... மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
ராஜா ராணி
ஒரே ஒரு லைன், முதல் காதல் தோற்றால் வாழ்க்கையே இல்லை என்பது இல்லை, அதற்கு பின்னால் அழகான வாழ்க்கை உள்ளது.
இதை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் அட்லீ.
கடந்த 2013ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இந்த படத்தில் இவர்கள் நடித்தார்கள், இவர்கள் தொழில்நுட்ப வேலைகள் செய்தார்கள் என நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, காரணம் ரசிகர்களுக்கு இந்த படம் குறித்து எல்லா விஷயமும் அத்துபடி தான்.
பெரிய அளவில் ஹிட்டான இந்த படம் காதலை மையப்படுத்திய கதைகளில் டாப் லிஸ்டில் இடம்பெறும்.
பாக்ஸ் ஆபிஸ்
ராஜா ராணி வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகள் ஆகின்றன, எனவே ரசிகர்கள் படத்தில் தங்களுக்கு பிடித்த விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த படம் ரிலீஸ் ஆன நேரத்தில் மொத்தமாக ரூ. 50 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.