16 நாள் முடிவில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் செய்துள்ள மொத்த வசூல்.. மாஸ் கலெக்ஷன்
டூரிஸ்ட் ஃபேமிலி
சசிகுமார்-சிம்ரன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
நல்ல கதைக்களத்துடன் தயாரான இப்படம் புக் மை ஷோ ஆன்லைன் முன்பதிவு மூலமாக மட்டுமே 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட சசிகுமாரின் ஹிட் பட பாடல் காட்சி வெளியிடப்பட்டது, அது ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தை 25 வயதான இயக்குனர் அபுஜன் ஜிவி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார், அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
விமர்சனங்கள் அமோகமாக வர படத்தின் பாக்ஸ் ஆபிஸிற்கு எந்த குறையுமே இல்லாமல் நடந்து வருகிறது. கடந்த மே 1ம் தேதி வெளியான இப்படம் 16 நாள் முடிவில் ரூ. 63 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.