16 ஆண்டுகளை கடந்த கோவா படம்.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
வெங்கட் பிரபு
தமிழ் திரையுலகில் பல பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர்சென்னை 28, கோவா, சரோஜா, மங்காத்தா, சென்னை 28 பார்ட் 2, கோட் என பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் கோட். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. சமீபத்தில் வெங்கட் பிரபுவின் மங்காத்தா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதுவரை உலகளவில் ரூ. 20 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
கோவா
இன்றுடன் வெங்கட் பிரபுவின் கோவா திரைப்படம் வெளிவந்து 16 ஆண்டுகள் நிறைவு ஆகியுள்ளது. ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும் கோவா படம் வெளிவந்து 16 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், அதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், கோவா படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் அப்போது ரூ. 7 கோடி முதல் ரூ. 8 கோடி வரை வசூல் செய்துள்ளது.