வெளிவந்து 17 வருடங்கள் ஆகும் அஜித்தின் வரலாறு படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
வரலாறு
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வரலாறு.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அசின், கனிகா, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும், இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார்.
இன்று வரை அஜித்தின் கேரியரில் டாப் 5 திரைப்படங்களில் ஒன்றாக வரலாறு இருக்கிறது. அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார் அஜித்.
வசூல் விவரம்
இன்றுடன் வரலாறு திரைப்படம் வெளிவந்து 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், வரலாறு திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் உலகளவில் ரூ. 38 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
