1997ம் ஆண்டு சிறந்த படங்களின் ஒரு பார்வை
தமிழ் சினிமாவிற்கு 1997ம் வருடம் ஒரு தனித்துவமான மற்றும் அசாதாரண ஆண்டு என்று கூறலாம்.
விமர்சனம் ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களும், பிளாக் பஸ்டர் படங்களும் அதிகம். இங்கேயும் நாம் 1997ம் வருடத்தில் செமயாக ஓடிய படங்களின் விவரத்தை காண போகிறோம்.
சூர்யவம்சம்
விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ஆனந்தராஜ், பிரியா ராமன், மணிவண்ணன் போன்றோர் நடிக்க வெளியான படம். அசுர வெற்றியடைந்த இப்படத்தின் 2ம் பாகம் வருமா என சரத்குமாரிடம் நிறைய முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் வந்த ரோஜாப்பூ சின்ன ரோஜாப்பு, சலக்கு சலக்கு போன்ற பாடல்கள் எல்லாம் இப்போதும் ரசிகர்களின் பேவரெட் லிஸ்டில் உள்ளது.
மின்சார கனவு
கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற இலட்சியத்துடன் கான்வென்ட் மாணவியான பிரியாவின் காதல் கதையை சுற்றிய படம்.
அரவிந்த் சாமி, பிரபுதேவா, காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க 1997ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி 175 நாட்களுக்கு மேல் ஓடியது.
பிலிம்பேர் விருது, தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருது என பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
இந்த காதல் கதைக்கு ஏற்ப ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஸ்ட்ராபெர்ரி பெண்ணே, தங்க தாமரை மற்றும் வெண்ணிலவே பாடல்கள் எல்லாம் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிது.
அருணாச்சலம்
பாட்ஷா, முத்துவிற்கு பிறகு நடிகர் ரஜினிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் அருணாச்சலம்.
சுந்தர். சி இயக்கத்தில் ரஜினியை தாண்டி ரம்பா, சௌந்தர்யா, ரகுவரன், மனோரமா என பலர் நடித்துள்ளனர். Brewster's Millions என்ற படத்தின் தழுவலாக அருணாச்சலம் படம் அமைந்துள்ளது.
பட கதை, நடிகர்கள் என படத்திற்கு மாஸ் என்றால் இன்னொரு பக்கம் தேவாவின் இசை. தாறுமாறான அவரது இசை குறித்து நாம் சொல்ல வேண்டியது இல்லை.
காதலுக்கு மரியாதை
பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி, சிவகுமார், ஸ்ரீவித்யா, மணிவண்ணன், சார்லி, ராதாரவி, தாமு, தலைவாசல் விஜய் என பல நட்சத்திர பட்டாளமே நடிக்க வெளியான படம். பாசில் தான் மலையாளத்தில் இயக்கிய அனியாதிப்ராவு என்ற படத்தை தான் தமிழில் இயக்கியுள்ளார்.
காதலர்களின் இதயத்தை நெகிழ வைத்த காதலுக்கு மரியாதை.
நேருக்கு நேர்
வசந்த் அவர்களின் இயக்கத்தில் இன்று முன்னணி நடிகர்களாக் பல கோடி வசூல் நாயகர்களாக வலம்வரும் விஜய்-சூர்யா நடித்த திரைப்படம். இந்த படத்தில் முதலில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க பின் ஏதோ சில காரணங்களால் வெளியேறி இருக்கிறார்.
இப்பட கதையை தாண்டி பாடல்கள் நிறைய கொண்டாடப்பட்டது.
இந்த படங்களை தாண்டி பாரதி கண்ணம்மா, இருவர், உல்லாசம், பிஸ்தா என சிறந்த படங்களும் வெளியாகி இருக்கிறது.

தனக்கே அதிகாரம்.. ஒருபக்கம் அன்புமணி ராமதாஸ் - நான்தான் தலைவர்.. மறுபக்கம் ராமதாஸ் கடிதம்! IBC Tamilnadu

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
