1998ம் ஆண்டின் தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள்
தமிழ் சினிமாவில் எல்லா வருடமும் பெரிய ஹிட் படங்கள் வருவதில்லை.
ஹிட் படங்கள், பிளாப் படங்கள் என எல்லா வருடமும் இருக்கும். தற்போது நாம் 1998ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த படங்களை பற்றி காண்போம்.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
விக்ரமன் இயக்கத்தில் கார்த்திக், ரோஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் அஜித் நடித்திருந்தார்.
கார்த்திக்கின் 100வது படமாக வெளியான இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று 250 நாட்களுக்கு மேலாக ஓடியது.
ஜீன்ஸ்
பிரம்மாண்டத்தின் உச்சமாக ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான படம் ஜீன்ஸ்.
ஒரே பாடலில் 7 அதிசயங்கள் காட்டியது, எலும்பு உருவத்தை நடனம் ஆட வைத்தது என்று இப்படம் ரிலீஸ் ஆன நேரத்தில் பிரம்மிப்பாக பார்க்கப்பட்ட விஷயம்.
இப்போது ஜீன்ஸ் படத்திற்கும் அதில் இடம்பெற்ற பாடல்களுக்கும் ரசிகர்கள் ஏராளம்.
நட்புக்காக
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், சிம்ரன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வெளியான படம். சரத்குமார் டபுள் ரோலில் நடித்த இப்படம் சிறப்பான வெற்றியை பெற்றது.
1998ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசின் திரைப்படம் விருது கிடைத்தது.
காதலா காதலா
தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த காமெடி படம் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக இப்படம் இருக்கும்.
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்த படத்தில் கமல்ஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா, எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்தில் ஹைலைட் எது என்று பார்த்தால் கிரேசி மோகன் அவர்களின் கதை தான்.
பிரியமுடன்
விஜய் மற்றும் கௌசல்யா நடிக்க வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியான படம் பிரியமுடன். திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம்.
வெற்றியடைந்த இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
