படையப்பா, அமர்க்களம் என மாஸ் படங்களை கண்ட 1999ம் வருடம்... ஒர் பார்வை
நாம் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமா கண்ட ஹிட் படங்களின் விவரத்தை பார்த்து வருகிறோம்.
அப்படி இந்த பதிவில் நாம் 1999ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களின் விவரத்தை காண்போம்.
படையப்பா
அப்பப்பா இந்த படத்தை பற்றி என்ன கூறுவது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் என பலரும் நடித்த திரைப்படம் படையப்பா.
இந்த பட கதையோ, பாடல்கள் செய்த சாதனையோ எதை பற்றியும் யாருக்கும் புதியதாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அப்படிபட்ட மாஸ் வெற்றியடைந்த ஒரு திரைப்படம், இப்போதும் மக்கள் இதுபோன்ற படத்தை எதிர்ப்பார்க்கிறார்கள் என்று கூறலாம். 210 பிரிண்டுகள் மற்றும் 700,000 ஆடியோ கேசட்டுகளுடன் உலகம் முழுவதும் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
வாலி
டபுள் ரோலில் நடித்த அஜித்திற்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைக்கப்பெற்ற படம் வாலி.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் காதல் த்ரில்லர் திரைப்படம் வெளியான இப்படம் 270 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகை ஜோதிகா.
சங்கமம்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரகுமான், விந்தியா, விஜயகுமார் என பலர் நடிக்க வெளியான படம்.
கதையை தாண்டி படத்தின் பாடல்கள் செம ஹிட், பாடல் வரிகளுக்காக வைரமுத்துவிற்கு தேசிய விருது, ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது எல்லாம் கிடைத்தது.
அமர்க்களம்
இன்று ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் அஜித் மற்றும் ஷாலினி. இந்த அமர்க்களம் படம் தான் இவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைய காரணமாக இருந்தது.
அஜித்தின் நடிப்பு, பாடல்கள் என சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம்.
முதல்வன்
இயக்குனர் ஷங்கர் படைப்பில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று முதல்வன்.
அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடித்த இப்படம் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். படத்தின் கதையோ ஏ.ஆர்.ரகுமானின் இசை நின்று பேசும்.
இப்படங்களை தாண்டி 1999ம் ஆண்டில் சேது, மின்சார கண்ணா, ஜோடி, நீ வருவாய் என, பூவெல்லாம் கேட்டுப்பார், காதலர் தினம், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களும் ரிலீஸ் ஆகி வெற்றிக் கண்டுள்ளன.

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri
