பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஹாலிவுட் அல்லாத படம்... முழு விவரம்
உலகில் அதிகம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பெறும் படங்கள் என்றால் அது முதலில் ஹாலிவுட் படங்கள் தான்.
பிரம்மாண்டம், கிராபிக்ஸ், வித்தியாசமான திரைக்கதை என புதுவித அனுபவத்தை கொடுப்பதால் ஹாலிவுட் படங்களை அதிகம் உலக சினிமா ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
இப்போது ஹாலிவுட் அல்லாத ஒரு திரைப்படம் வெளியான 12 நாட்களில் மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வசூல் வேட்டை நடத்தியுள்ளது. சீனாவில் வெளியான நே ஜா 2 (Nezha 2) என்ற திரைப்படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளியாகியுள்ளது.
16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாவலை மையமாக கொண்டு இந்த நே ஜா 2 படம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம், டிராகன் அரசர்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை மையமாக கொண்டது தான் இந்த படக்கதை உருவாகியுள்ளது.
இதுவரை படம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8674 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளதாம்.