பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 2 பிரபல நடிகைகள்... யாரெல்லாம் தெரியுமா?
பாக்கியலட்சுமி
தமிழ் சின்னத்திரையில் புதுமுக நடிகையை முக்கிய நாயகியாக வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் பாக்கியலட்சுமி.
கடந்த 2020ம் ஆண்டு சுசித்ரா மற்றும் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்க தொடங்கப்பட்ட இந்த தொடர் 1500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பெங்காலியில் ஒளிபரப்பான ஸ்ரீமோயி தொடரின் ரீமேக்காக தான் பாக்கியலட்சுமி ஒளிபரப்பாகிறது.
நடிகைகள்
இப்போது கதையில் இனியா தனது கணவர் போதைக்கு அடிமையானவர் என்பதை தனது அப்பாவிடம் கூறி கதறுகிறார்.

கடைசி எபிசோடில் பாக்கியா, தனது மருமகன் கைதாவதையும் பார்க்கிறார். அடுத்தடுத்து பரபரப்பான கதைக்களம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் 2 நடிகைகள் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
அதாவது பாக்கியாவின் அம்மாவும், அவரது அண்ணியும் வரும் எபிசோடுகளில் என்ட்ரி கொடுக்க உள்ளார்களாம்.
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan