ஒரே மாதத்தில் வெளியாகும் நடிகர் ஆர்யாவின் படங்கள் - ரசிகர்கள் உற்சாகம்
அவன் இவன் படத்திற்கு பின் பல வருடங்கள் கழித்து, விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் எனிமி.
இப்படத்தை, அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.
விஷால், ஆர்யாவுடன் இணைந்து, மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் கூட, இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் எனிமி படத்தை வருகிற செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.
அதேபோல், சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ படமும் அதே மாதத்தில் ரிலீசாக உள்ளதாம்.
ஒரே மாதத்தில் ஆர்யாவின் இரண்டு படங்கள் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.