2 நாள் முடிவில் சூர்யாவின் கங்குவா படம் செய்த மொத்த வசூல்.. அதிகாரப்பூர்வமாக வந்த தகவல்
கங்குவா
ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், நட்டி நட்ராஜ், கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த கங்குவா படம் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியாகி இருந்தது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளன. ஆனாலும் படத்திற்கான வசூலுக்கு எந்த குறையும் வரவில்லை.
பாக்ஸ் ஆபிஸ்
நவம்பர் 14ம் தேதி வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் மொத்தமாக ரூ. 58.62 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.
இந்த நிலையில் கங்குவா படம் 2 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 89.32 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் வேட்டை நன்றாகவே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
