தேசிய விருது வென்ற நித்யா மேனன்.. இரண்டு ஆண்டுகளை கடந்த திருச்சிற்றம்பலம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
திருச்சிற்றம்பலம்
மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த பீல் குட் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தனர்.
அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் இப்படம் வெற்றியடைந்தது.
இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை நித்திய மேனனுக்கு சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், இப்படத்தில் வரும் மேகம் கருக்காத பாடலுக்கு சிறந்த நடன இயக்குனர் என்கிற தேசிய விருது ஜானி மாஸ்டருக்கு கிடைத்துள்ளது.
வெளிவந்து 2 ஆண்டுகள்
இந்த நிலையில், இன்றுடன் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனமும் வீடியோ ஒன்றை வெளியிட்டள்ளனர்.
இந்த நிலையில் இப்படம் செய்துள்ள மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 117 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
The love for Pazham & Shobana never fades!❤️?#2YearsofThiruchitrambalam@dhanushkraja @anirudhofficial @offBharathiraja @prakashraaj @MithranRJawahar #NithyaMenen #RaashiiKhanna @priya_Bshankar @AlwaysJani @dancersatz #Thiruchitrambalam pic.twitter.com/szJjNVwDeb
— Sun Pictures (@sunpictures) August 18, 2024