கோடிகளில் கலக்கும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி பட கலெக்ஷன்... 20 நாளில் மொத்த வசூல்?
டூரிஸ்ட் ஃபேமிலி
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சமீபத்தல் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்க ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து காட்டப்பட்டது.
பாக்ஸ் ஆபிஸ்
வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் உலகளவில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் ரூ. 53 கோடி மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ள இப்படம் மொத்தமாக ரூ. 78 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.