20 வருடத்தை எட்டிய மெகா ஹிட் படமான ரஜினியின் சந்திரமுகி... முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம்
சந்திரமுகி
மலையாள சினிமாவில் 1993ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான படம் மணிச்சித்ரதாழ்.
இந்த படத்தின் தமிழ் ரீமேக்காக 2005ம் ஆண்டு வெளியான படம் தான் சந்திரமுகி.
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, வடிவேலு, பிரபு, நயன்தாரா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
பாக்ஸ் ஆபிஸ்
கோலிவுட் மட்டுமில்லாமல் தென்னிந்திய திரையுலகில் அந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக ஓடிய படம் என்ற பெருமையை பெற்றது.
இப்படம் 890 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது. படம் மொத்தமாக உலகம் முழுவதும் ரூ. 70 கோடி வரை வசூலித்து புதிய சாதனை படைத்தது.
இதுதவிர ஜெர்மன் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.